பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய நேற்று (21) இரவு 10.00 மணி முதல் இன்று (22) காலை 06.00 மணி வரை நாடுபூராகவும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.