ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் பாரிய நிலநடுக்கம்



இந்த நிலநடுக்கமானது முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், அதன்பிறகு 7.1 அளவிலான நிலநடுக்கங்கள் என அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம், ஜப்பானின் நிச்சினனுக்கு வடகிழக்கே 20 கி.மீ தொலைவில் 25 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post