கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் இடைப்போகத்தில் பாசிப்பயறை நட்டு உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் எஸ். எல். எம். ஹனீபா தலைமையில் (06) கல்லறச்சல் 02 பிரதேசத்தில் இடம்பெற்றது.
இம்முறை சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் 25 ஏக்கரில் பாசிப் பயறு விதைகளை நடுவதற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வு விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.