குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன..



குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. 

அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் ஊடகங்கள் ஊடாகவும், முன்னெச்சரிக்கை முறைகள் ஊடாகவும் மக்களுக்கு தொடர்ந்து அறிவித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
Previous Post Next Post