ஆரம்பமாகவுள்ள ஆப்கானிஸ்தான் -தென்னாப்பிரிக்கா வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் தொடர்



ஆப்கானிஸ்தான் (Afghanistan) மற்றும் தென்னாபிரிக்க (South Africa) அணிகளுக்கு இடையில் முதன் முறையாக இருதரப்பு கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) நடவடிக்கை எடுத்துள்ளது.

கிரிக்கெட் உறவு

அந்தவகையில், போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) சார்ஜாவில் (Sharjah) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த போட்டியானது தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post