தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக மனுஷ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 41(1) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மனுஷ நாணயக்காரவிடம் கையளித்துள்ளார்.