இங்கிலாந்து - இலங்கைக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரின் இரண்டாவது போட்டி இன்று



இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரின் இரண்டாவது போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் இன்று (29) ஆரம்பமாகியுள்ளது.

இப்போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிவரும் குசல் மெண்டிஸ}க்குப் பதிலாக மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்துவரும் பெத்தும் நிஸ்ஸன்க அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2021இல் நடைபெற்ற போட்டியின்மூலம் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான பெத்தும் நிஸ்ஸன்க கடைசியாக 2022இல் விளையாடியிருந்தார். அதன் பின்னர் உபாதை காரணமாக டெஸ்ட் அணியில் இடம்பெறாமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post