ஆகஸ்ட் 21 ஆம் திகதி முதல் நீர் கட்டணத்தில் திருத்தம்



எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர் கட்டணத் திருத்தத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஆகஸ்ட் 16ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையினால் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துடன் தற்போதைய நீர்க் கட்டணச் சூத்திரத்தின் பிரகாரம் இரசாயண திரவங்கள் உட்பட ஏனைய செலவினங்களைக் கருத்தில் கொண்டு நீர்க் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:
Previous Post Next Post