மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் , கண்டி, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை



இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

2024 ஜூலை 31ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2024 ஜூலை 30ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் , கண்டி, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில், சில இடங்களில் 50 மி.மீ.க்கும் அதிகமான ஓரளவு பலத்த மலை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பதுளை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
Previous Post Next Post