ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் கமலா ஹாரிஸ்: வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!



அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படிவங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் (X) தளத்தில் இன்று (27) இட்ட பதிவொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "ஒவ்வொரு வாக்குகளையும் பெற கடுமையாக உழைப்பேன். நவம்பரில் எங்கள் மக்கள் இயக்க பிரசாரம் வெற்றி பெறும்" என குறிப்பிட்டுள்ளார்.

பராக் ஒபாமா 

இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா (Barack Obama) தம்பதிகளும் ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் அமெரிக்காவின் அற்புதமான ஜனாதிபதியாக வருவார் என்று ஒபாமா பாராட்டியுள்ளார்.

மேலும்,  குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donal Trump) போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post