தொழிற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு


தொழில் அனுபவம் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கும் ஜூன் மாதம் 7ஆம், 8 ஆம் திகதிகளில் திருகோணமலை மக்ஹெய்ஸர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தொழிற்தகுதி இருந்தும் சான்றிதழ் தேவையான இளைஞர் யுவதிகள் மற்றும் தொழில் தேடுபவர்கள் இந்நிகழ்வில் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கின்றீர்கள்.

தங்களுடைய பெயர் மற்றும் ஏனைய விடயங்களை பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

நிகழ்வுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post