க.பொ.த சாதாரண தரப்பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை..



கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரப்) பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் பரீட்சகர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அங்கீகாரத்தை கோரும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாளை (14) கிடைக்கவுள்ளதுடன் அவ்வரிக்கை எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், அதன்படி கொடுப்பனவை அதிகரிப்பதற்கும் உத்தேசித்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post