நேரில் ஆராய்ந்து தீர்வு தருவேன் : குருநகர் கடல்றொழிலாளர் பிரதிநிதிகளிடம் கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு




பண்ணை கடல் பிரதேசத்தில் அதிகளவில்  கடலட்டை பண்ணைகள் அமைத்து தொழில் முயற்சிகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபடும் போது ஏற்படும் தொழில் சார் பிரச்சினைகள் மற்றும் தமக்கான தொழில்சார் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது தொடர்பில் நேரில் ஆராய்ந்து தீர்வு தருவேன் என்று குருநகர் கடல்றொழிலாளர் பிரதிநிதிகளிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை   யாழ்ப்பாணம் குருநகர் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் நேற்று (23) சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதிகளுக்கு நேரடி விஜயம் செய்து ஆராய்ந்த பின்னர் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post