முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2,500 ரூபாய் உதவித்தொகை 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்.



முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த 2500 ரூபா மாதாந்த கொடுப்பனவை 5000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம்; தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அகுனகொலபேலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (09) முன்பள்ளி ஆசிரியர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடியபோதே அவர்; இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், முன்பள்ளி ஆசிரியர்களின் 2500 ரூபா கொடுப்பனவை 5000 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
Previous Post Next Post