இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக இஞ்சி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக 2000 ரூபாவிற்கும் அதிகமாக இஞ்சி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் 01 கிலோ உலர் இஞ்சியின் விலை 3000 ரூபாவைத் தாண்டியுள்ளது.
இஞ்சி தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் இவ்வாறு விலை உயர்ந்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.