நாட்டின் சில பகுதிகளில், நாளைய தினம் ஆரம்பமாக உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கான ஆயத்தங்கள் நேற்று பகல் வரையில் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு, கிளிநநொச்சி, மன்னார், பதுளை, அனுராதபுரம், பொலனறுவை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயங்கள் காரணமாக மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதில் சவால்களை எதிர்நோக்க நேரிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சீரற்ற காலநிலையினால் பரீட்சை நடாத்துவதில் ஏற்படக்கூடிய இடையூறுகளை தடுப்பதற்கு மாற்று வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை பரீட்சை திணைக்களம் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சில பகுதிகளில் இன்னமும் பரீட்சை நிலையங்களை ஒழுங்கு செய்யும் பணிகள் பூர்த்தியாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய ஏற்பாடுகள் செய்யாத காரணத்தினால் ஒரு மாணவருக்கேனும் பரீட்சைக்குத் தோற்ற முடியாது போனால் அதற்கான பொறுப்பினை பரீட்சைகள் திணைக்களம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென பிரிந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.