கனடாவில் ஹெலிகொப்டர் விபத்து: மூன்று பேர் பலி



கனடாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவின், பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் பயணம் செய்த மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கனேடிய பாதுகாப்பு துறை தகவல்
இவ்வாறு காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய பாதுகாப்பு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் விபத்து தொடர்பிலான விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

மேலும், சுற்றுலா நிறுவனமொன்றின் ஹெலிகொப்டரில் பயணித்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post