தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன் டெஸ்டில் வரலாற்று வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
இந்திய அணி தென் ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.
இந்நிலையில், முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அதன் பின்னர் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 என வெற்றி பெற்றிருந்தது.
இதற்கமைய இந்த தொடரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி தாமதமாக பந்து வீசியதால் 2 புள்ளிகளை இழந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 6ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, 2இல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளதோடு மற்றொன்று போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
எனினும், நேற்று இடம்பெற்ற இரண்டாவது டெஸ்டில் வரலாற்று வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 26 மேலதிக புள்ளிகளை பெற்று 54.16 சதவீதத்துடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
இரண்டாவது டெஸ்டில் போட்டியில் தோல்வி அடைந்த தென் ஆபிரிக்கா 2 டெஸ்டில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
நியூசிலாந்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், மற்றொரு போட்டியில் தோல்வியும் அடைந்து 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும், அவுஸ்திரேலியா 4ஆவது இடத்திலும், பங்பளாதோஸ் அணி 5ஆவது இடத்திலும் உள்ளன.