குவைத் நாட்டின் மன்னரான ஷேக் நவாப் தனது 86 ஆவது வயதில் காலமானார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஷேக் நவாப் அல் அகமது அல் சபா மன்னராக பதவி ஏற்றார்.
மன்னரின் மறைவுக்கு பலரும் இரங்கல்
குவைத்தின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய ஷேக் நவாப், சர்ச்சைகளுக்கு இடமில்லாத வகையில் தெரிவானார்.
ஆனால் அவரது வயது காரணமாக குறுகிய காலம் மட்டும் அவரது பதவி வகிப்பார் என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் தற்போது பட்டத்து இளவரசராக கருதப்படும் ஷேக் மெஷல் அல் அகமது அல் ஜாபர் (83), குவைத்தில் மன்னராக பதியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
