இலங்கை 20-20 கிரிக்கெட் அணியின் தலைவராக சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட உபுல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழு இந்த மாற்றத்தை செய்வதில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெஸ்ட் அணி தலைவர்
இதேவேளை டெஸ்ட் அணி தலைவர் பதவியை திமுத் கருணாரத்னவுக்கு வழங்க புதிய தெரிவுக்குழு தீர்மானம் செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறாயினும், ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் (ODI) பதவி தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை – சிம்பாப்வே போட்டிக்கான இலங்கை அணி தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
