பலாங்கொடை பின்னவல பகுதியில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக பலாங்கொடை-ஹட்டன் பிரதான வீதியில் இன்று (08) அதிகாலை முதல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
கடும் மழை
நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பலமுறை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
