பெண்கள் மீதான அத்துமீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க, 14 மாதங்களுக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் பங்கேற்றுள்ளார்.
அவருக்கு விதிக்கப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் தடை நீக்கப்பட்டதன் மூலம் இந்த வருடத்திற்கான கழகங்களுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நுகேகொட விளையாட்டுக் கழகத்துடன் SSC விளையாட்டுக் கழகம் சார்பில் தனுஷ்க குணதில்ல மீண்டும் களமிறங்கினார்.
இந்நிலையில் மழை காரணமாக குறித்த போட்டி 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
வெற்றி இலக்கு
அதன்படி இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய SSC விளையாட்டுக் கழகம் 41. 5 ஓவர்களில் 152 ஓட்டங்களைப் பெற்றது.
153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய நுகேகொடை விளையாட்டுக் கழகம், வெளிச்சமின்மை காரணமாக போட்டி இடைநிறுத்தப்படபோது, 37 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
