கனடாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

 


கனடாவின் ஒட்டாவாவில் கொவிட் நோயார்களின் வைத்தியசாலை அனுமதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் வீரா எட்சஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்..


குறித்த பகுதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


பாதுகாப்பு ஏற்பாடு


கடந்த ஆண்டு இந்தக் காலப் பகுதியை விடவும் இந்த ஆண்டில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


குறிப்பாக 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் நோய்த் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்றும் இதனால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post