கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிநவீன சேவைகள் ஆரம்பம்

 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து முகாமைத்துவ முறைமையானது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு புதிய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


விமான நிலையத்தில் பிரதான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் ரேடார் செயற்பாட்டு மையம் என்பன டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது.


இதற்காக 1.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக, இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


டிஜிட்டல் சேவைகள்


இந்த டிஜிட்டல் விமானப் போக்குவரத்து முகாமைத்துவ முறைமை நேற்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Previous Post Next Post