கனடாவின் வின்னிபெக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தாம் சம்பவ இடத்திற்கு விரைந்த போது ஐந்து பேர் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் கீழே விழுந்திருந்ததை அவதானித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்
ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு இடையிலான உறவு தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
