MOP உரத்தின் விலை 50 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கையிருப்பில் உள்ள உரம்
Muriate of Potash (MoP) உரத்தின் விலையை குறைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.
தற்போது பொதுத்துறை உர நிறுவனங்களில் 28,600 மெட்ரிக் தொன் MOP உரம் கையிருப்பில் உள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.