கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் தினங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என வைத்திய அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெங்கு நோயாளர்கள்
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொழும்பில் தற்போது 3,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் 80% டெங்கு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டிசம்பர் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என வைத்திய அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
