பாரிய மண்சரிவு – போக்குவரத்து முற்றாக பாதிப்பு

 

ஹாலிஎல - உடுவர பிரதேச வீதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் குறித்த விதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.


குறித்த தகவலை இன்று (15.11.2023) காலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


ஆபத்தான முறை


தற்போது பெய்து வரும் தொடர் மழையால் குறித்த வீதியில் பெரிய மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.


இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பாடசாலை செல்லும் மாணவர்கள், தொழிலாளர் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.


இந்நிலையில் இடிந்து விழுந்த பாரிய மேட்டின் மீது பாடசாலை மாணவர்களும் ஏனையவர்களும் ஏறி ஆபத்தான முறையில் அவ்விடத்தை விட்டு வெளியேறுவதை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post Next Post