நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

 


இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.


2023 நவம்பர் 11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு


2023 நவம்பர் 10ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மேல், மத்திய, சப்ரகமுவ,வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலை வேளையில் ஆங்காங்கே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மேல், சப்ரகமுவ, மத்திய வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Previous Post Next Post