காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

 


இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.


இதற்கமைய நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


காலநிலை மாற்றம்


இதேவேளை ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோர பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Previous Post Next Post