இந்தியாவில் ஓடும் தொடருந்தில் தீ விபத்து....! தவிர்க்கப்பட்ட பாரிய அசம்பாவிதம்

 

இந்தியாவின் மகாராஷ்டிரா - அகமதுநகர் மாவட்டத்தில் பயணிகள் தொடருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


5 பெட்டிகளில் தீப்பற்றிய நிலையில் பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் பாரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.


மேலதிக விசாரணை


குறித்த தொடருந்து அஷ்தி தொடருந்து நிலையத்திலிருந்து அகமதுநகர் தொடருந்து நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையிலே இவ்வாறு தீ பற்றி எரிந்துள்ளது.


தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை போராடி அணைத்தனர்.


மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Previous Post Next Post