துருக்கி நாட்டின் விமான நிறுவனமான துருக்கிய ஏர்லைன்ஸ் இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
குறித்த சேவை 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
விமான சேவை
இஸ்தான்புல்லுக்கும் கொழும்புக்கும் இடையில் வாராந்தம் 4 விமான சேவைகளை நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஒவ்வொரு திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நேரடி விமான சேவைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுகின்றது.