சுவிட்சர்லாந்தில் மான்களைக் கொல்ல திட்டம்: எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பு

 

சுவிஸ் மாகாணமொன்றில் அதிகரித்து வரும் மான்கள், காட்டுப்பன்றிகள் முதலான விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக, அவற்றைக் கொல்ல திட்டமிடப்பட்டு வருகிறது.


விலங்குகள் ஆதரவு அமைப்பு


எதிர்ப்பு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் மான்கள், காட்டுப்பன்றிகள் முதலான விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக, அவற்றைக் கொல்ல திட்டமிடப்பட்டு வருகிறது.


ஆனால், விலங்குகளைக் கொல்வதற்கு Animal Equité என்னும் விலங்குகள் நல அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பல நாடுகளில் விலங்குகளின் எண்ணிகையைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்றிற்கு கருத்தடை செய்யும் நடைமுறை உள்ளது.


ஜெனீவாவில் அந்த முறையைப் பயன்படுத்தி மான்கள் முதலான விலங்குகளுக்கு கருத்தடை செய்யலாம் என்னும் ஆலோசனையை முன்வைத்துள்ளது Animal Equité அமைப்பு.


ஆனால், விலங்குகளின் இனப்பெருக்க உணர்வுகளில் தலையிடக்கூடாது என்றும், அதைவிட அதிகப்படியான விலங்குகளைக் கொல்வதே சிறந்தது என்றும் அரசு தரப்பு கூறுகிறது.


இந்நிலையில், விலங்குகளைக் கொல்வதற்கு எதிராக 20,000க்கு அதிகமானோர் மனு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

Previous Post Next Post