இரண்டு விமானங்கள் மோதி விபத்து: விமானிகள் பலி

 


அமெரிக்காவின் நடந்த தேசிய விமான கண்காட்சியில் ஏற்ப்பட்ட விமான விபத்தில் விமானிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.


குறித்த விபத்து சம்பவம் நேற்று (17.09.2023) அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் இடம்பெற்றுள்ளது.


விசாரணைகள் ஆரம்பம்


விமான கண்காட்சியின் போது தரையிறங்க முற்பட்ட போது இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இந்த விபத்து குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை, பெடரல் விமான சேவை நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.


Previous Post Next Post