பாடசாலை மாணவர் மீது தலைக்கவசத்தால் சரமாரி தாக்குதல்!

 

கணேமுல்ல பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவரை மற்றுமொரு மாணவர் தாக்கியதால், மாணவர் காயமடைந்த நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான மாணவன் 11ஆம் தரத்தில் கல்வி கற்று வருவதாகவும், நேற்று பாடசாலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மற்றுமொரு மாணவர் அவரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


கணேமுல்ல பொலிஸில் முறைப்பாடு 

தனது மகனை தலைக்கவசத்தால் நெற்றியிலும் தலையிலும் கடுமையாக தாக்கியதாக தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் கணேமுல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.


இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த மாணவன் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post