கொழும்பிற்குள் சேவையில் ஈடுபடுத்துவதற்காக நடத்துனர்கள் இல்லாத பேருந்துக்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று (13.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடத்துனர் இல்லாத பேருந்து சேவை
கொழும்பிற்குள் சேவையில் ஈடுபடுத்துவதற்காக இன்னும் 3 மாதங்களுக்குள் நடத்துனர்கள் இல்லாத பேருந்துக்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் அட்டை மூலம் மட்டுமே அதில் பயணம் செய்ய முடியும் என்றும், இந்த பேருந்துகளை இயக்குவதன் மூலம் கொழும்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
