உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டி சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கும் நார்வேயின் கார்ல்சனுக்கும் இடையே நடைபெற்று வருகிறது.
இந்த உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது.
2 சுற்றுகளாக நடைபெறும் இறுதிப் போட்டியில் நேற்றையதினம் (22.08.2023) முதல் சுற்று நடைபெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மொத்தம் 35 நகர்வுகளுக்கு பின்னர் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இளம் வயதில் தகுதி பெற்ற 3வது வீரர்
இதனையடுத்து இன்று நடைபெறவுள்ள 2 ஆவது சுற்றில் வெற்றி பெறும் வீரர் உலக செஸ் சாம்பியன் என்ற பட்டத்தை கைப்பற்றுவார்.
அத்துடன், 2024ல் நடைபெறும் கேன்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு இளம் வயதில் தகுதி பெற்ற 3வது வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

