கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

 


கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய சிசிடிவி கெமரா கட்டுப்பாட்டு நிலையத்தை நிறுவுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கண்காணிப்பு விஜயமொன்றில் நேற்று கலந்து கொண்ட அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இந்த கமரா அமைப்பு புதிய தொழில்நுட்ப மென்பொருளைப் பயன்படுத்தி தரவுகளை பகுப்பாய்வு செய்ய முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இ-கேட் கவுண்டர் திட்டம்

இதனிடையே, வருகை முனையம் மற்றும் புறப்படும் முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிவரவு அதிகாரிகள் கவுன்ட்டர்களையும் ஆய்வு செய்துள்ளனர்.


விமானப்பயணிகளுக்கு திறமையான மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதற்கும், மற்ற சர்வதேச விமான நிலைய நிலைமைகளுக்கு ஏற்ப குடியேற்ற சேவைகளை வழங்குவதற்கும், தரைத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.


மேலும், புதிய இ-கேட் கவுண்டர்கள் அமைப்பது குறித்தும்.திரன் அலஸ் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Previous Post Next Post