அமெரிக்காவில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு உலங்கு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கலிபோர்னியாவில் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இரண்டு உலங்கு வானூர்திகள் நேருக்கு நேர் மோதியுள்ளதாகக் கூறப்படுகிறது.
விரிவான விசாரணைக்கு உத்தரவு
இவ்வாறு விபத்திற்குள்ளான உலங்கு வானூர்திகளில் ஒன்று பத்திரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், மற்றொன்று மலைப் பகுதியில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பணியிலிருந்த 3 அதிகாரிகள் உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலங்கு வானூர்திகள் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
