ஒட்டாவாவில் இடம்பெற்ற விமான விபத்தில் விமானி பலி

 ஒட்டாவா பகுதியில் இடம்பெற்ற விமான விபத்து ஒன்றில் விமானி உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஒட்டாவா மாகாண பொலிஸார் மற்றும்  கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு சபை என்பன ஆரம்பித்துள்ளன.


ஒன்றாரியோ மாகாணம் கிழக்கு ஒட்டவாவின் அலெக்சாண்ட்ரியா பகுதியில் இந்த விமான விபத்து இடம்பெற்றுள்ளது.


விசேட குழு நியமிப்பு 

செஸ்னா 150 ரக விமானமே இவ்வாறு அலெக்ஸாண்ட்ரியா பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.


இந்த விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட குழு ஒன்றை நியமித்து உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த விபத்தில் விமானத்தின் விமானி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளதுடன், சக பயணி ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous Post Next Post