முல்லைத்தீவில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

 முல்லைத்தீவு அளம்பில் வடக்கு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு அளம்பில் வடக்கு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் உள்ள மலசல குழியினை கடந்த 08.07.2023 அன்று துப்பரவு செய்யும் போது அதில் இருந்து வெடிபொருட்கள் பல அடையாளம் காணப்பட்டன.

சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து குறித்த வெடிபொருட்களை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.


நீதிமன்ற உத்தரவு

இந்நிலையில் நேற்றைய தினம் நீதிமன்ற உத்தரவிற்கமைய சிறப்பு அதிரடிப்படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

மீட்கப்பட்ட வெடிபொருட்களில் M75 வகையின் 56 கைக்குண்டுகள், 06 RPG தோட்டாக்கள், 81 மி.மீ வகையின் 13 பாரா, 81 மி.மீ மோர்டார் குண்டு 49 சுற்றுகள், 60 மி.மீ மோட்டார் குண்டுகள் 01, 60 மி.மீ பாரா 01, 7.62 x 3 வகையின் 2000 தோட்டாக்கல் (T56 வகை), 02 பாரா மோட்டார் சார்ஜர்கள் என்பன காணப்பட்டன.

இதற்கமைய குறித்த வெடிபொருட்களை சிறப்பு அதிரடிப்படையினரால் செயலிழக்கம் செய்யப்பட்டு எதிர்வரும் 05.10.23 அன்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Previous Post Next Post