No title

 கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலம்! தாயை தேடும் பொலிஸார்


பொகவந்தலாவ - சென் ஜோன் டிலரி பகுதியில்,  பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


பொலித்தீன் பையில் சுற்றப்பட்டவாறு குழந்தையின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


பொலிஸார் விசாரணை

சென் ஜோன் டிலரி தோட்டப் பகுதியில் பிரதான வீதியில் உள்ள சிறிய பாலத்தின் கீழ்  சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.


பிறந்த குழந்தையின் சடலம் குறித்த கால்வாயில் வீசப்பட்டிருக்கலாம் என நோர்வூட் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


குழந்தையை பிரசவித்த தாயை கண்டுபிடிக்க நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post