கட்டுநாயக்க பிரிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர்

 சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தங்க துண்டுகளுடன் இந்திய பிரஜை ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தங்க துண்டுகள் 

முப்பத்தொரு வயதுடைய தொழிலதிபர் என கூறப்படும் இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 60 கிராம் எடையுள்ள தங்க துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post