கொழும்பு- டி.சி.சி பாலத்தின் கால்வாயில் அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று(09.07.2023) அதிகாலையில் இருந்து குறித்த கால்வாயில் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர், நேற்று மாலை மது போதையில் அந்த பகுதியில் வீழ்ந்துகிடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

