புத்தளம் மாவட்டத்தில் அண்மைக்காலமாக தொடரும் தீப்பரவல் சம்பவம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று(21.07.2023) பிற்பகல் புத்தளம் ஜோஷப்வாஸ் மாவத்த பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ பரவலையடுத்து அங்கிருந்தவர்களினால் உடனடியாக புத்தளம் நகரசபை அதிகாரிகளுக்கு தகவலை வழங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து புத்தளம் நகரசபை தீயனைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
குறித்த தீப்பரவல் காரணமாக சுமார் 3 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தென்னை மரங்கள், தீக்கரையாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இவ்வாறான தீச்சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றதைக் காணக்கூடியதாக இருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், குறித்த தீப்பரவியமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டரியப்படவில்லையென்றும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.