வவுனியா பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டியில் முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து மாணவி ஒருவர் பங்குபற்றி வெற்றிவாகை சூடியுள்ளார்.
2023ம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக இலங்கையின் வடமாகாணத்தின் வவுனியாவிலிருந்து 40 கிலோகிராம் எடை பிரிவில் 92 கிலோகிராம் பளு தூக்கி 16 வயதையொட்டிய வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி கோசியா திருமேனன் தெரிவாகியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதிவரை டெல்லியில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க சென்றிருந்த நிலையில் இன்றைய தினம் (12.07.2023) இடம்பெற்ற போட்டியில் மூன்றாம் இடத்தினை பிடித்து வெண்கல பதக்கத்தினை பெற்றுள்ளார்.


