சமீபத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றிவாகை சூடியது.
இதன்மூலம் அவுஸ்திரேலியா அணி; ஐசிசியின் டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வகையான கிரிக்கெட் கோப்பைகளை வென்றுள்ள முதல் நாடாக சாதனை படைத்துள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பையை 1987, 1999, 2003, 2007, 2015 ஆண்டிலும், டி20 உலகக் கோப்பையை 2021ஆவது ஆண்டிலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பினை 2023லும் பெற்று இந்த சாதனையை படைத்துள்ளது.
3 விதமான கோப்பைகள்
அவுஸ்திரேலியா அணி. மேலும் அனைத்து வகை சாம்பியன் பட்டியல்களில் 5 ஆஸ்திரேலிய வீரர்கள் இருந்துள்ளார்கள். ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட் என 5 வீரர்கள் இந்த 3 விதமான கோப்பையை வென்ற அணியில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2015 உலகக் கோப்பை அணியிலிருந்து இந்த ஐவரும் 3 விதமான கோப்பைகளை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
