பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 5500 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் நியமனம்
மேலும், 7500 ஆசிரியர்கள் இன்று (16.06.2023) நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், மொழிகள் மற்றும் வர்த்தகம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
