இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல ஜயவர்தன மீது கடும் குற்றச்சாட்டு

தவறான முடிவுகளினால் இலங்கை கிரிக்கெட் அழிந்து வருவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தேசிய விளையாட்டு சபையின் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்  என்பது மஹேல ஜயவர்தன, பிரமோத்ய விக்ரமசிங்க, ஷம்மி டி சில்வா மற்றும் பலரின் சொத்து அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.


வீரர் தேர்வு

இந்த நாட்டில் உள்ள இருபத்தி இரண்டு மில்லியன் மக்களின் விளையாட்டு கிரிக்கெட் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் நிர்வாகம் பலவீனமாக இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், 20-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டிய வீரர்களை நிர்வாகம் சரியாக தேர்வு செய்யத் தவறிவிட்டதாகக் கூறியுள்ளார்.

Previous Post Next Post