ரத்மலானை குடு அஞ்சுவின் உதவியாளர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை பண்டாரகம - வெல்லமில்ல பகுதியில் நேற்றைய தினம் (05.05.2023) முன்னெடுக்கப்பட்டதாக பாணந்துறை வலான குற்றத்தடுப்பு பிரிவிர் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், துபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகத்தின் பிரதான வர்த்தகர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்